திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுகவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஒரு கோஷ்டியாகவும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆதரவாளர்களான பழனியை சேர்ந்த ராஜாமுகமது மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் தீபாவளி வாழ்த்து கூறி பழனி நகரில் உள்ள பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து இருந்தனர்.
அந்த பேனர்களில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் படம் போடவில்லை. அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சீனிவாசன்மகன் ராஜ்மோகன் மற்றும் ஆதரவாளர்களும் தீபாவளிக்காக திண்டுக்கல் மாநகரில் வைக்கப்பட்ட தீபாவளி வாழ்த்து பிளக்ஸ் பேனர்களில் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் படம் மற்றும் அவருடைய மச்சான் படம் போடாமல் அங்கங்கே வைத்து .
இதைக் கண்டு லோக்கலில் உள்ள விஸ்வநாதன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் அந்த பிளக்ஸ் பேனருக்கு போட்டியாக நகரம், ஒன்றிய அதிமுக
சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து போஸ்டர்கள் இரண்டு மாடல்களில் விஸ்வநாதன் ஆதரவாளர்களான நெப்போலியன் மற்றும் திருமாறன் தலைமையிலான ர.ர.க்கள் அடித்து மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஒட்டி இருக்கிறார்கள்.
இப்படி அடிக்கப்பட்ட தீபாவளி வாழ்த்து போஸ்டர்களில் அமைச்சர் சீனிவாசன் படம் போடவில்லை. அதைகண்டு சீனி ஆதரவாளர்கள் டென்ஷன் அடைந்து விட்டனர்.
இந்த நிலையில் தான் இப்படி விஸ்வநாதன் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட தீபாவளி வாழ்த்து போஸ்டர்கள் நகரில் சில இடங்களில் கிழித்து போட்டு இருப்பதை கண்டு விச்சு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
இப்படிப் பட்ட கீழ் தரமான வேலைகளை எல்லாம் அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்கள் தான் செய்து இருப்பார்கள் என்று தெரிகிறது. எங்க முன்னாள் அமைச்சர் அண்ணன் விஸ்வநாதன் அம்மா மூலம் தான் கட்சிக்கு வந்தாரே தவிர சீனிவாசன் எல்லாம் கட்சிக்கு கொண்டு வர வில்லை. அதனால் தான் அம்மா முப்பெரும் துறையை கொடுத்தார். அதன் மூலம் மாவட்டத்தில் கட்சியை வளர்த்து கொண்டு கட்சிக்காரர்களுக்கும் கட்சிகாரர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்து தன்னால் முடிந்த பண உதவிகளையும் செய்து வந்தார்.
அந்த நன்றி விஸ்வாசத்திற்காகத் தான் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அண்ணன் விஸ்வநாதன் படம் போட்டு தீபாவளி வாழ்த்து போஸ்டர்கள் அடித்து . அது பொறுக்க முடியாமல் தான் சீனி ஆதரவாளர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து விட்டனர் என்று கூறினார்கள்.
ஆனால் அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்களோ நாங்க அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிக்க வில்லை. அப்படி பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என்று கூறினார்கள். இருந்தாலும் இச் சம்பவம் திண்டுக்கல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.