தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அதேபோல் மக்கள் மற்றும் விவசாய பெருமக்களிடம் கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு ஒரு புதிய அரசாணையை வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பு டெல்டா மக்கள் மற்றும் விவசயிகள் மத்தியில் பெரும் மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் மக்கள் கருத்துக்களை கேட்காமல் தமிழகத்தில் எந்த ஒரு மத்திய அரசின் திட்டங்களும் செயல்படுத்தப்படாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் டெல்டா பகுதி மக்களின் கருத்தைக் கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த கூடாது, மக்களின் கருத்தைக் கேட்க தேவையில்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.