பேரம் முடிந்ததால்தான் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கனவே பேரம் பேசி லஞ்சம் வாங்கியதால்தான் விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இந்தத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது என்பதை நாடு நன்றாக உணர்ந்திருக்கிறது.
பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பு இருக்கின்றது என்பதை நேற்று சட்டமன்றத்தில் கூறியிருந்தேன். முதல்வர் பெண்களுக்கு எதிரான பாதிப்பு குறைந்துள்ளது என்று கூறுகிறார். ஆனால் அதை எப்படி குறைப்பது என்பது குறித்து கூறவில்லை.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஜக்கி வாசுதேவ் தனிப்பட்ட நபராக கருத்து கூறி இருக்கிறார், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் ஒரு கருத்துகளைச் சொல்லலாம். அதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
ஆகையால், எந்தப் பணிகளாக இருந்தாலும், அது தொழிற்சாலையாக இருந்தாலும், வளர்ச்சி திட்டங்களாக இருந்தாலும் மக்களின் கருத்தை அறிந்த பிறகுதான் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.