நாள்தோறும் நாடகம் - பிரேமலதா பேச்சு
சென்னை, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர், விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம், நேற்று நடந்தது. விழாவில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேசியதாவது:
தமிழக அரசு, 'நீட்' நுழைவுத் தேர்வு விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவர்களும், பெற்றோரும், மன உளைச்சல் அடைந்துள்ளனர். தமிழகத்தில், தற்போது மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி நடக்கிறது. நாள்தோறும் நாடகங்கள் அரங்கேறுகின்றன. விஜயகாந்த், இந்த பிரச்னைக்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார். 'முத்தலாக்' ரத்து உத்தரவு, பெண்கள் சம்பந்தப்பட்டது. அதை, இஸ்லாமிய பெண்கள் ஏற்றால், நாங்களும் ஏற்றுக் கொள்வோம். இது தான், தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு. இவ்வாறு பேசினார்.