கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் இயங்கிவருகின்றன. இதில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை தடுப்பதற்காக குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் விருத்தாசலத்தில் உள்ள ஒரு சில கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக ரகசிய தகவல்கள் குழந்தை ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் மாவட்ட தொழிலாளர் ஆணையர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், "குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிபவர்களை மீட்டு, அவர்களுக்கு தேவையான கல்வி அளித்து வழிவகை செய்யப்படும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினர்.