2003- ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி முடித்து அனைத்து மாவட்டங்களிலும் தலைமை காவலர்களாக பலரும் பணியாற்றி வருகிறார்கள்.அந்த 182 தலைமை காவலர்கள் 'வாட்ஸ் ஆப் குழு' மூலம் ஒன்றிணைந்து தங்களுக்கிடையேயான செய்திகளை பறிமாறி கொண்டு வருகிறார்கள்.
2003- ஆம் ஆண்டு கடலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பிரபு, வேலு ஆகியோர் இறந்துவிட்ட நிலையில், இவர்களது குடும்பத்திற்கு உதவி செய்யலாம் என வாட்ஸ்அப் குருப் மூலம் தகவல் பறிமாற்றம் செய்து முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் இறந்து போன பிரபுவின் மகன் அரிமித்ரன் கல்வி செலவுக்காக தபால் நிலையத்தில் ரூபாய் 1,00,000 KVP பத்திரத்தில் டெபாசிட் செய்தும், பிரபுவின் மனைவி மீனாட்சி பெயரில் சேமிப்பு கணக்கு ரூபாய் 70,000மும் டெபாசிட் செய்யபட்டது. மேலும் இறந்து போன மற்றொரு காவலர் வேலு மகள்கள் ஸ்ருதிதேவி, விஜயபாரதி, மகன் மெளலி கார்த்திகேயன் ஆகியோருக்கு தனித்தனியாக ரூபாய் 51,000 KVP பத்திரம் டெபாசிட் ஆக 1,53,000 ரூபாய் செய்யபட்டது.
2003- ஆம் ஆண்டு பயிற்சி முடித்து உடல்நலக்குறைவால் வேலை செய்ய முடியாத காரணத்தினால் பணிநீக்கம் செய்யபட்ட தர்மா (எ) தனசேகர் என்பவரின் பெண்குழந்தை மோக்திஷாஸ்ரீ முடக்குவாத நோயால் திருநெல்வேலி மயோபதி காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு ரூபாய் 1,60,000 பணத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M. ஸ்ரீஅபிநவ் வழங்கினார். வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்து பாதிப்படையும் குடும்பத்தார்க்கு உதவி செய்யும் காவலர்களின் மனிதநேயம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.