Published on 30/04/2020 | Edited on 30/04/2020
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கரோனா வைரஸ் தாக்கத்தையொட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 30 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தொழிலாளர்களும், பொதுமக்களும், தினக்கூலி தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆங்காங்கே தன்னார்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் உதவி வருகின்றனர். அதேபோல சிதம்பரம் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட நலிந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அணி வணிகர் ராமநாதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார்கள். இதில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க நகர செயலாளர் பிரபாகரன், தலைவர் ராமு, பொருளாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.