Skip to main content

அரசுப் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி; மாணவர் உயிருக்குப் போராட்டம்

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
அரசுப் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி; மாணவர் உயிருக்குப் போராட்டம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள நல்லூர் கந்தம்பாளையத்தை அடுத்த சித்தம்பூண்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது-13). இவர் விட்டம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

விக்னேஸ்வரன்  மற்றும் மாணவர்கள் சிலர் நேற்று பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஆசிரியர் குப்புராஜ் அவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தார். அப்போது  மாணவர் ஒருவர் பந்தை வீச, அந்த பந்தை ஆசிரியர் குப்புராஜ் அடித்துக்காட்டி மாணவர்களுக்கு பயிற்சியளிதுக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை கை நழுவி சென்று அருகில் நின்று கொண்டிருந்த விக்னேஸ்வரனின் பின் தலையில் பலமாக தாக்கியது.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மாணவனை ஆசிரியர் குப்புராஜ் உள்ளிட்டவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

மாணவர் விக்னேஸ்வரன் சுயநினைவை இழந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள், உயிருக்கு ஆபத்தான  நிலையில்  இருக்கும் மாணவர் விக்னேஸ்வரனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிந்து, குப்புராஜை கைது செய்துள்ளனர்.

சிவசுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்