Skip to main content

சென்னையில் பெரியார் திடலில் ஒரே நாளில் இருபெரும் மாநாடுகள் எழுச்சிக்கோலம்

Published on 25/08/2017 | Edited on 26/08/2017
சென்னையில் பெரியார் திடலில் ஒரே நாளில்
 இருபெரும் மாநாடுகள் எழுச்சிக்கோலம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  அறிவித்தபடி, சென்னை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (25.8.2017)  காலை 10.30 மணியளவில் மாநாடு எழுச்சியுடன்  கி.வீரமணி  தலைமையில் தொடங்கியது. மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தொடக்கவுரை ஆற்றினார். மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து உணவு உரிமை பறிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத அலட்சியப்போக்கால் காவிரி நதிநீர் உரிமை பறிப்பு, மாநிலங்களின் உரிமையாக இருந்த கல்வியை ஒத்திசைவுப்பட்டியலில் வைத்து, அய்ந்தாம் வகுப்பிலேயே இரு முறை தேர்ச்சி அடையவில்லை என்றால், அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் தடுப்பது, தொழிற்கல்வி முறையை பள்ளி சிறார்களிடம் புகுத்துவதன் மூலமாக  மறைமுகமாக குலக்கல்வித்திட்டத்தை புகுத்துவது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் சிபிஎஸ்இ கல்வித்திட்டத்தின்படி நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமை பறிப்பு, கீழடி உள்ளிட்ட அகழ்வாய்வுப்பணிகளை முடக்கி, தமிழர் வரலாறு இருட்டடிப்பு, இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதன்வாயிலாக மொழி உரிமைப் பறிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள் விரிவாக பல்வேறு தகவல்களை ஆதாரங்களுடன் மாநிலங்களின் உரிமைகளை மறுக்கின்ற மத்திய அரசின் தொடர் செயல்பாடுகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார்கள். 

திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி உணவு உரிமையிலும் மூக்கு நுழைப்பு எனும் தலைப்பிலும், பேராசிரியர் அ. மார்க்ஸ் காவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு எனும் தலைப்பிலும்,  பொதுப்பள்ளிக்கான மேடை அமைப்பின் தலைவர்  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கல்வியில் தலையீடு எனும் தலைப்பிலும், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தமிழர் வரலாறு இருட்டடிப்பு எனும் தலைப்பிலும்,  திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் அ. இராமசாமி மொழி உரிமைப் பறிப்பு எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

மாநில அதிகார மீட்பு மாநாட்டின் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  எழுச்சியுடன் சிறப்புரையாற்றினார்.

சார்ந்த செய்திகள்