ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் குடிநீர் திட்ட பணி செய்வதற்காக ஊழியர்களாக மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 24 பேர் கோபிசெட்டிபாளையத்தில் வந்திருந்தனர். அவர்களை இன்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் இரண்டு பேருக்கு காய்ச்சல் மற்றும் கரோனா போன்ற அறிகுறி உள்ளது என அவர்கள் 2 பேரையும் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். ஒருவரை கோவை அரசு மருத்துவமனைக்கு மற்றொருவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்று அட்மிட்செய்தனர்.
அதேபோல் மற்ற 22 பேரையும் கோபிசெட்டிபாளையத்தில் தனியாக ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி 15 நாட்களுக்கு வெளியே வரக்கூடாது என அவர்களை வைத்திருந்தார்கள். வெளி மாநிலத்தவர்கள் மூலம் கரோன வைரஸ் பரவுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையத்தில் 2 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது போல் அறிகுறி உள்ளது. அதனால் இன்று ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது முழு ஆய்வுக்கு பிறகே அவர்களுக்கு இந்த வைரஸ் நோய் உள்ளதா என தெரியவரும் என மருத்துவர்கள் கூறினார்கள்.