இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் மூன்றாவது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அப்போது "வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் மின்சார வாரியம், "தமிழகத்தில் நாளை (05/04/2020) இரவு 09.00 மணியின் முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மற்ற மின்சாதனங்களை அணைக்க வேண்டாம்.அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்சனை ஏற்படும்.மின்சாரம் சீரான அளவில் கிடைக்க செயற் பொறியாளர்கள் அனைவரும் நாளை பணியிலிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.