Skip to main content

ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கிய அரிமா சங்கங்கள்!

Published on 06/06/2021 | Edited on 06/06/2021

 

coronavirus prevention trichy hospitals provide medical equipments

தமிழகத்தில் கரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர், கரோனா தடுப்பு பணிகளுக்கான நிவாரண உதவிகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் வழங்க முன்வரவேண்டும் என்று விடுத்த கோரிக்கையின் படி நேற்று (05/06/2021) திருச்சி மாநகரில் உள்ள அரிமா சங்கங்கள் ஒன்றிணைந்து சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கியுள்ளனர்.

 

மேலும் அரிமா சங்கம் சார்பில் ஒரு ஆம்புலன்ஸும், ஒரே நேரத்தில் 300 நபர்களுக்கு பரிசோதனை செய்யக்கூடிய மருத்துவக் கருவிகள், உள்ளிட்டவைகளை வழங்கி உள்ளனர்.

 

இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்ட நகர்ப்புற மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்