Skip to main content

காவலர்களுக்கு முழு முகக்கவசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

CORONAVIRUS PREVENTION DUTY POLICE FACE SHIELD MASKS HIGH COURT BRANCH ORDER

 

தமிழகத்தில் களத்தில் உள்ள காவலர்களுக்கு முழு முகக்கவசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி மதுரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் இன்று (26/06/2020) விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் களத்தில் உள்ள காவலர்களுக்கு முகத்தை மறைக்கும் ஷீல்டு (FACE SHIELD) வழங்க உத்தரவிட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காவலர்கள் முழு முகக்கவசம் அணிவதை அந்தந்த மாவட்ட எஸ்.பி.-க்கள் உறுதிப்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும். பணியில் உள்ள காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்