Published on 19/03/2020 | Edited on 19/03/2020
இந்தியாவில் கரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். கரோனாவால் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும்" என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.