தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மளிகை, காய்கறி, இறைச்சி, பல சரக்கு, தேநீர், நடைபாதை கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை இயங்கலாம்.
ஹார்டுவேர், மின் பொருள், வாகன பழுது நீக்குதல், ஸ்டேஷனரி, வாகன விற்பனை நிறுவனங்கள் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை இயங்கலாம்.
ஃபேன்சி ஸ்டோர்கள், பாத்திரக்கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஸ்டூடியோக்கள், செல்ஃபோன், கட்டுமானப் பொருள் கடைகள் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை இயங்கலாம்.
உணவகங்களில் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சாலையோர உணவுக் கடைகளில் காலை 06.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சலூன்கள், அழகு நிலையங்களின் நேரமும் மாலை 07.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு பயிற்சி குழுக்கள் திறந்தவெளியில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடனும், தனியார் மற்றும் நிதி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடனும் செய்லபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை விதிமுறைப் பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள், கார்கள் இ- பதிவின்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மின் பணியாளர்கள், பிளம்பர்கள், டெக்னிஷியன் மற்றும் சுய தொழில் செய்வோருக்கு மாலை 07.00 மணி வரை இ- பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் நாளை (21/06/2021) முதல் அமலுக்கு வருகிறது.