கரொனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சதா விளம்பரம், செய்த பாபா ராம்தேவ் தரப்பு மீது மோசடி வழக்குப் போடப்பட்டிருப்பது சாமியார்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈஷா மைய ஜக்கி வாசுதேவ், விரைவில் ஆயுர்வேதக் கல்லூரி ஒன்றைத் தொடங்கும் திட்டத்தில் இருக்கார். அதுக்கு விளம்பர வெளிச்சம் கிடைக்கும் வகையில், கரோனாவுக்குத் தடுப்பு மருந்து என நோய் எதிர்ப்பு மருந்தை அறிமுகப்படுத்தி, செமையாக் கல்லா கட்ட வேண்டும் எனத் திட்டம் போட்டிருக்கார். இதில் பாபா ராம்தேவையும், வாழும்கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரையும் பார்ட்னரா ஆக்கிக்கலாம் என முடிவு செய்து அவங்களோடும் கலந்து பேசியிருக்கார்.
ஆனால் பாபா ராம்தேவோ, ஏற்கனவே நாம் பதஞ்சலி நிறுவனம் பல பொருட்களைச் சந்தையில் இறக்கியுள்ளோம், இவர்களோடு ஏன் கூட்டு சேர வேண்டும் என மற்ற இருவரையும் ஓவர்டேக் செய்து, கரோனாவைத் தடுக்கும் மருந்துங்கிற பெயரில் 'கொரோனில்’ என்ற மருந்தைத் தன் பதஞ்சலி நிறுவனம் முலம் அறிமுகப்படுத்திவிட்டார். இதனால் டென்ஷனான ஜக்கி வாசுதேவ் மற்றும் ரவிசங்கரும், ஒன்று கூடி பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இவர்கள் கொடுத்த பிரஷரால்தான் பாபா ராம்தேவ் உட்பட 5 பேர் மீது மோசடி வழக்குப் பதியப்பட்டு இருப்பதாகச் சாமியார்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.