Published on 07/04/2020 | Edited on 07/04/2020
உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, கரோனா தடுப்புப் பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் வேலை இழந்த ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.