சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. அதுமட்டும் இல்லாமல் மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வெளியூர்களுக்கு பயணம் செய்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்துள்ளதாக ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.