கரோனாவின் தாக்கத்தை உணர்ந்து, இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருந்த போதிலும் கரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. இதுவரை 12,448 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றில் இருந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்களை பாதுகாக்க அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவ சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவர்களைக் கொண்டு 11 வகையான சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிறப்பு கவனம் தேவைப்படும் நபர்கள் கண்டறியப்படு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.