Skip to main content

கரோனா நிவாரணம்! அரசியலால் விழி பிதுங்கும் கட்சி விஐபிகள்!!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வத்தலக்குண்டு பேரூராட்சி கரோனா நிவாரண அரசியலால் அரசியல் கட்சி விஐபிகள் விழி பிதுங்கி காணப்படுகின்றனர்.

 

dindigul


திமுக நகர கூட்டுறவு வங்கி தலைவர் ரிலாக்ஸ் கணேசன் கரோனா நிவாரணமாக தனது வார்டில் உள்ள 400 குடும்பங்களுக்கு 3 டன் காய்கறிகளை வீடு வீடாக சென்று வழங்கினார். தற்போது காந்திநகர் ஒன்றாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் நாகூர்கனி, தனது வார்டை மீண்டும் தக்க வைப்பதில் மும்பரம் காட்டி வருகிறார். அதனடிப்படையில் தனது வார்டு பொதுமக்களுக்கு 3 டன் அரிசி, 5 டன் காய்கறிகளை வீடு வீடாக சென்று வழங்கினார்.

 

dindigul


இருவரும் தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பொதுமக்களிடம் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் வத்தலக்குண்டு பேரூராட்சியில் இரண்டு வார்டுகளுக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் சென்றடைந்துள்ளது. இதனால் மற்ற வார்டு பொதுமக்களிடம் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பகுதியில்  உள்ள அரசியல் கட்சி வி.ஐ.பி.கள்  நிவாரண பொருட்கள் வழங்க ஏன் முன்வரவில்லை என எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் திமுக, அதிமுக என அனைத்து கட்சி வி.ஐ.பி.களும் என்ன செய்வது என்று  திகைத்து வருகின்றனர். இந்த கரோனா நிவாரணம் அரசியல் கட்சி வி.ஐ.பி.களை விழிபிதுங்க வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்