Skip to main content

கரோனா நோயாளிகளின் விவரங்களை வெளியிடக்கோரிய மனு தள்ளுபடி!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020

கரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

 corona patients details release issue - Petition dismissed


சென்னையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த அவசர மனுவில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், இந்திய அரசின் நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வந்தாலும், ஒரு சிலருக்கு பாதிப்புகள் இருந்தால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்  குறிப்பிட்டிருந்தார். 
 

 nakkheeran app


மேலும், வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் சார்ந்துள்ள பகுதியை அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிடுவதால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்காணிக்கவும்,  பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருப்பதை தடுக்கவும் முடியும்  என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் நிர்மல்குமார் அமர்வில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின்படி, ஒருவரது விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டால் சமூக பிரச்சனை ஏற்படும் என்றும்  குறிப்பிட்டனர்.  மேலும்,  ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினர். அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்