தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் அண்டை மாநிலமான கேரளாவில் கரோனாவின் இரண்டாம் அலை இன்னும் கட்டுக்குள் வராமல், அதிகமான எண்ணிக்கையில் தொற்று பரவிவருகிறது. இந்த நிலையில், கேரளத்திலிருந்து வருபவர்களுக்குக் கட்டாயம் கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக, கேரளாவிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் அனைவருக்கும் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் கரோனா சான்றிதழ் கேட்கப்படுகிறது. சரியான சான்றிதழ் இல்லாதவர்கள், டெஸ்ட் எடுக்கப்பட்ட பின்னரே ரயில் நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். சுகாதார இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையில், டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.