Published on 02/10/2020 | Edited on 02/10/2020
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் பகுதியில் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் சோதனை மாதிரிகள் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சளி பரிசோதனை மாதிரிகள் சாலையில் தவறி விழுந்ததை கவனிக்காமல் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக சென்றுள்ளனர்.
சேலம் கொத்தாம்பாடி சாலையில் பரிசோதனை மாதிரிகள் சிதறிக் கிடந்ததைக்கண்டு அதிர்ந்த பொதுமக்கள் இது தொடர்பாக மருத்துவ பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளை அப்புறப்படுத்தினர். சாலையில் சிதறிய மாதிரிகளில் சில வாகனங்கள் ஏறியதால் சேதமடைந்தது.