Published on 25/06/2020 | Edited on 25/06/2020
!['Corona' for 68 in Vellore overnight](http://image.nakkheeran.in/cdn/farfuture/-s21vbetQVSnik4m-gZSMukPBBEs2QiJGQFbjw1I1VE/1593084787/sites/default/files/inline-images/ASGDHFG_1.jpg)
தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கரோனா உறுதியானதால், வேலூரில் மொத்த பாதிப்பு என்பது 888 ஆக அதிகரித்துள்ளது.