கரோனா தொற்று மூன்றாம் நிலையை எட்டும் அபாயத்திலுள்ள நிலையில், நோய் பரவும் வேகம் அதிகாித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், நாள்தோறும் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே இருக்கிறது. இதில் குமாி மாவட்டத்தில் சந்தேக பட்டியலில் இருந்தவா்களில் 5 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக பட்டியலில் இருந்த 71 பேருக்கு சோதனை செய்ததில் அதில் 58 பேருக்கு நெகடிவ் ரிசல்ட் வந்தது. 5 பேருக்கு மட்டும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்து நோய் உறுதிபடுத்தப்பட்டது. மேலும் 8 பேருக்கு இன்னும் சோதனை முடிவு வரவில்லை. இந்த நிலையில் கரோனா உறுதிபடுத்தப்பட்ட தேங்காபட்டணத்தைச் சோ்ந்த 5 பேரும் வசிக்கும் அந்த குடியிருப்பு தெருக்களை அதிகாாிகள் அடைத்து சீல் வைத்தனா். இதனால் அந்த தெருக்களில் வசிக்கும் யாரும் வெளியே வர முடியாத நிலை உருவாகியுள்ளது. அவா்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைபட்டால் அரசின் உதவி மையத்தை தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
மேலும் சீல் வைத்து அடைக்கபட்ட அந்த தெருக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரோனா தொற்றிய 5 பேரும் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூாி மருத்துவமனையிலுள்ள, கரோனா வாா்டில் அனுமதிக்கபட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அதிகாாிகளால் சீல் வைக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் 270 களப்பணியாளா்கள், 40 கண்காணிப்பாளா்கள், 5 மருத்துவா்கள் கொண்ட குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
குமாி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கபட்ட இந்த 5 போில் 4 போ் சமீபத்தில் முஸ்லீம் அமைப்பு ஒன்று டெல்லியில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவா்கள். ஒருவா் இந்தோனேசியாவில் இருந்து ஊா் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.