Skip to main content

தமிழ்நாட்டில் கரோனா 3ஆம் அலை... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

Corona 3rd wave in Tamil Nadu ... Chief Minister's order to issue important announcement

 

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பாதிப்புக்கேற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

 

இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா 3ஆம் அலையைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கரோனா தடுப்பு பணிகளுக்காக மட்டும் இதுவரை 353 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகையிலிருந்து 100 கோடியைக் கரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

2023-24 டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
2023-24 TASMAC Income Increase

தமிழகத்தில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45,885.67 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (21.06.2024) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் மாலை நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஆயத்தீர்வை துறைக்கு கீழ் இருக்கக்கூடிய டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்திருக்க கூடிய வருவாய் தொடர்பான பட்டியல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கொள்கை விளக்க குறிப்பில் கிடைத்துள்ள தகவலின்படி 2023-24 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45,855.67 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட 1734.54 கோடி ரூபாய் கூடுதலாக டாஸ்மாக் வருமானம் கிடைத்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Next Story

கள்ளச்சாராய மரணம்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
counterfeiting liquor case ; CM consults with all District Collectors

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதல்வரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனையில்  மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து வருகிறார்.