
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். நேற்று இரவில் இருந்து இவர் போலிசாரிடம் அடிவாங்கும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. என்ன காரணத்திற்காக காவலர்கள் இவரை வெளுக்கிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான கதை. நேற்று மதியம் அந்த கிராமத்தில் காவலர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை தடுத்தி நிறுத்தி எச்சரித்துள்ளார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் தினேஷ் வந்துள்ளார். அவரை மறித்த காவலர்கள் ஏன் வெளியே சுற்றுகிறாய் என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு தினேஷ், "நீங்கள் ஏன் வெளியே நிற்கிறீர்கள், உங்களுக்கு கரோனா வராதா? இது ஏன் ஊரு, என்னுடைய கோட்டை. நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்" என்றார். அதற்கு பெண் காவலர்கள், முதலைமைச்சர் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல என்று கூறியுள்ளார்கள். அதற்கு தினேஷ், "முதல்ல அவர இங்க வர சொல்லுங்க, ஓட்டு கேட்க மட்டும் வர தெரியுதுல்ல, வந்து கரோனாவ காட்ட சொல்லுங்க" என்று கூறி இருக்கிறார். பொறுத்து பார்த்த காவலர்கள், இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று வெளுத்துள்ளார்கள். ஐயோ! சார் நான் இனிமே அப்படி செய்ய மாட்டேன் என்று அடி பொறுக்க முடியாமல் அவர் கத்தியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.