Skip to main content

டென்ஷனாக இருக்கும் நேரத்தில் தமிழ் இசை நிம்மதியைத் தருகிறது - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

ரகத

 

டென்ஷனாக இருக்கும் நேரத்தில் தமிழ் இசை நிம்மதியைத் தருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னையில் தமிழ் இசைச் சங்கம் 80வது ஆண்டு விழா கூட்டத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இசை அறிஞர்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்குபெற்ற அந்த விழாவில் முதல்வர் சிறப்புரை ஆற்றினார்.

 

இவ்விழாவில் பேசிய அவர், " முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பல கடினமான சூழ்நிலைகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. கரோனா தொற்று, பேரிடர், கடுமையான மழை வெள்ளம் எனப் பல பிரச்சனைகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தோம். இதனால் பெரிய அளவில் டென்ஷன் இருக்கும். அதையும் மீறி வேலை செய்யத் தமிழ் இசை எப்போதும் ஊக்கம் கொடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. டென்ஷனாக இருக்கும் நேரத்தில் தமிழ் இசை நிம்மதியைத் தருகிறது. எனவே இசையைப்போல் ஒரு மன நிம்மதி கொடுக்கும் மருத்துவம் வேறு எதுவுமில்லை" என்றார்.

 

இந்த விழாவில் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் எஸ்.சௌமியா அவர்களுக்கு "இசைப்பேரறிஞர்" பட்டமும், மயிலை திரு.பா.சற்குருநாதன் ஓதுவார் அவர்களுக்கு "பண் இசைப் பேரறிஞர்" பட்டத்தையும் முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.


 

சார்ந்த செய்திகள்