மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் பெண்களுக்கு 41% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மம்தா பானர்ஜி, இந்த முறை 41% பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். இதுவே ஒரு பெரிய சாதனையாகும். ஏனென்றால் கடந்த தேர்தலில் நாங்கள் 35% பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தோம். இந்தத் தேர்தலில் அதை அதிகரித்துள்ளோம். என்று பெருமையுடன் சொன்னார்.
அதே நேரம் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த ராகுல்காந்தி வந்த போது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பேசும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொடுப்போம் என்றார். இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியில் உள்ள பெண் அரசியல்வாதிகள் மத்தியில் தமிழகம் - புதுச்சேரிக்கு ஒதுக்கியுள்ள 10 சீட்டுகளில் கண்டிப்பாக 3 சீட்டு கிடைக்கும் என்கிற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பெண் தலைவர்கள் இடையே பெரிய மல்யுத்தமே நடைபெறுகிறது என்கிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மகிளா காங்கிரஸ் கண்டிப்பாக சீட்டு கொடுப்பார்கள் என்பதால் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி திருவள்ளுர் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த தொகுதிக்காக செல்வபெருந்தகை முயற்சி பண்ணிக்கொண்டுயிருக்கிறார். ஜான்சிராணிக்கு தொகுதி கண்டிப்பாக கிடைக்கும் என்றும் அவருக்கு தான் சீட்டு கொடுக்க வேண்டும் என்று தமிழக மகிளா காங்கிரஸ் மகளிர் அணியினர் கடுமையாக அழுத்தம் கொடுத்துக்கொண்டுயிருக்கிறார்கள்.
இதே போல கரூர் தொகுதிக்கு ஜோதிமணிக்கு உறுதியாகி இருக்கிறது. இன்னோரு சீட்டுக்காக காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் நடிகை குஷ்பு தனக்கு கோவில் கட்டிய திருச்சியில் சீட்டு வேண்டும் என்று முழு முனைப்போடு அழுத்தம் கொடுத்துக்கொண்டுயிருக்கிறார். காரணம் அமுமுக சார்பில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்த சாருபாலா தொண்டைமான் தற்போது அமுமுக சார்பில் நிற்பதால் காங்கிரஸ் கட்சியில் பெண் வேட்பாளர் இருந்தால் சரியாக இருக்கும் என்று முனைப்பாக இருக்கிறார்.
மம்தா தேர்தலில் 41 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்திருக்கும் நிலையில் ராகுல்காந்தி 33 சதவீதம் இடம் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் பெண்கள் மல்லுகட்டி வருகிறார்கள்.