காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பொதுவெளியில் 'யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார்' என்று பா.ஜ.க. ராகவனின் பாலியல் குற்றத்தைச் சிறிதும் வெட்கமின்றி ஆதரிக்கும் சீமான் எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்காக நான் பேசுவதாக சொல்கிறார்.
பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களை, பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பவர்களை தட்டிக்கேட்க பதவி எதுவும் தேவையில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி என்பது சீமான் போன்ற மலிவான, அரசியல் வாதிகளை விமர்சிப்பதன் மூலம் கிடைக்கக் கூடியதல்ல. பெருந்தலைவர் காமராசர் வகித்த மாபெரும் பொறுப்பு.
சீமான் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய எளிய கேள்விகள் பாலியல் குற்றவாளியான கே.டி.ராகவனை ஏன் ஆதரிக்கிறார்? பாலியல் குற்றவாளிகளின் புகலிடமான பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டிய தேவை என்ன?பா.ஜ.க.வின் 'B' டீம் இல்லையெனில் ஏன் ஆதரிக்கிறார்? தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு சீமானின் பதில் என்ன?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.