Skip to main content

நவ.20ல் மதிமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு: வைகோ அறிவிப்பு

Published on 02/10/2017 | Edited on 02/10/2017
நவ.20ல் மதிமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு:
வைகோ அறிவிப்பு



நவம்பர் 20-ம் தேதி மதிமுக சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை எழும்புரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க மாநில அரசு அனுமதிக்கக் கூடாது. கோவையில் காமராஜரால் தொடங்கப்பட்ட அச்சகத்தை விற்பனை செய்வதை கைதவிட வேண்டும். 

உலகத்தின் முதன் மொழியான தமிழை ஆட்சி மொழி ஆக்குங்கள் என்பது எங்கள் நிலைப்பாடு. தமிழகம் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு அதிகரித்துள்ளது. மதிமுக சார்பில் மாநில சுயாட்சியை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். எந்த எந்த துறைகளில் எல்லாம் மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது என்பதை முன்நிறுத்தி இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் மாநில சுயாட்சி கோரிய கட்சிகளின் தலைவர்களை அழைக்கிறோம். இதில் குறிப்பாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபருக் அப்துல்லா, அகாலி தளத்தினுடைய தலைவர் பர்காசிங் பாதல், இந்திய மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி அதன் கேரள முதல்வர், தமிழகத்தில் திமுக, தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்