இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மங்களூர் ஒன்றிய குழு கூட்டம் நேற்று (19.12.2021) திட்டக்குடி கட்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் கே. செல்வராசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பு செயலாளர் ஆர். சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் வி.பி. முருகையன், எம். நிதி உலகநாதன், பி. ராமசாமி, சிவப்பிரகாசம், மனோகரன், சிலம்பரசன், தேவா, பொன்னுசாமி, பெரியசாமி, லெட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ‘மங்களூர் ஒன்றியத்தில் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, உளுந்து ஆகிய பயிர்கள் 90% வீணாகியுள்ளது. தமிழக அரசே விவசாயத்துறை மூலம் உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், இந்தியன் கேஸ் சிலிண்டர் அலுவலகத்தைத் திட்டக்குடியில் கொண்டுவர வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.