டாஸ்மாக் மீண்டும் திறப்பது குறித்து நீதிமன்றத்தில் மேல் முறையிட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் விற்பனையை எப்படி இன்னும் எளிமைபடுத்தலாம் என்று புதிய யுத்திகளுடன் தயார் நிலையில் இருக்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்.
திருச்சியில் கடந்த 7ம் தேதி 163 கடைகள் திறப்பட்டது. முதல் இரண்டு நாட்களும் கடுமையான கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி கேள்விக்குறியாதனதால், டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் திறக்க அளித்த மேல்முறையீட்டு மனு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது, விசாரணை நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் தீர்ப்பு எப்படியும் டாஸ்மாக் திறக்க சொல்லி வரும் என்கிற நம்பிக்கையில் முன்னெச்சரியாக டாஸ்மாக் ஊழியர்களை அழைத்து குடிமகன்களிடம் வழங்கும் டோக்கன்களை வழங்கியுள்ளனர்.
வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு கலரில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாகவும். இதை வைத்துதான் இனி குடிமகன் மது வாங்க முடியும் என்றும், படிக்காதவர்களும்கூட கலர் டோக்கனை வைத்தே வாங்க முடியும் என்கிறார்கள்.
தீர்ப்பு வெளியானவுடன் இந்த நடைமுறையை பின்பற்ற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் டாஸ்மாக் வட்டார ஊழியர்கள்.