Skip to main content

தேர்தலை நிறுத்த நினைக்கும் கலெக்டர்: அம்பலப்படுத்திய வேட்பாளர் ஜோதிமணி

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

கரூர் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணியும் அதிமுக சார்பில் தம்பித்துரையும் போட்டியிடுகிறன்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே திட்டமிட்டு நேரம் கடத்துவதாக சொல்லி செந்தில்பாலாஜி தரப்பினர் குற்றம் சாட்டிய பின்பு சிறிது தள்ளுமுள்ளுக்கு பிறகு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு பணி செய்ய விடாமல் தடுத்தாக செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

 

 

இதை அடுத்து இறுதி பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்க ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தனர் செந்தில்பாலாஜி தரப்பினர். ஆனால் கரூர் கோட்டாச்சியர் திமுக கொடுத்த ஆன்லைனில் விண்ணப்பத்தை நிராகரித்தார். அதிமுகவிற்கு அனுமதி கொடுத்திருந்தார். அதில் மாலை 1 மணியிலிருந்து 6 மணி வரை என்று கொடுத்திருந்தார். 

 

attack

 

இதன் பிறகு வேட்பாளர் ஜோதிமணியுடன் செந்தில்பாலாஜி கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அதிமுக கொடுத்த அனுமதி கடிதம் போலியானது என்றும் அவர்கள் கொடுத்திருந்த நேரம் 1.49 மணி முதல் 1.49 மணி வரை தவறாக எழுதிக்கொடுத்தை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டிர்கள் என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த தவறு நிர்வாகம் பக்கம் என்று உணர்ந்து கொண்ட கோட்டாசியர் அதிமுகவிற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்து விட்டு திமுகவிற்கு அனுமதி வாங்கினார். அதில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை என்று அனுமதி வாங்கினார். 

 

இதற்கு இடையில் அதிமுகவிற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்த தகவல் வெளியானவுடன் அமைச்சர் விஜயாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து திட்டமிட்டபடி மதியம் 1 மணியிலிருந்து 6 மணி வரை பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவித்தார். 

 

இதற்கு இடையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தி.மு.க. வழக்கறிஞர் செந்தில் தலைமையில் கொடுத்த அனுமதியை ஏன் ரத்து செய்தீர்கள் என்று மாறி மாறி கேட்ட அதிர்ச்சியடைந்த கலெக்டர் வீட்டில் உள்ளே மறைந்து கொண்டார். 

 

அதன் பிறகு வேட்பாளர் ஜோதிமணியிடமும், கரூர் சின்னசாமியிடமும் நள்ளிரவு தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் தேர்தலை நடத்த முடியுமான என்று தெரியவில்லை ஆகவே தேர்தலை நிறுத்த தான் தலைமைக்கு தகவல் கொடுக்க போகிறேன் என்று சொல்லியிருக்கார் அதற்கு வேட்பாளர் எங்கள் பக்கம் இருந்து எந்த பிரச்சனையும் வராது என்று உறுதியளித்திருக்கிறார். 

 

attack

 

காலையில் திமுக. சார்பில் உயர்நீதிமன்றத்தில் இறுதி நாள் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்க மனு அளித்திருந்தனர். உடனே அதிமுகவினரும் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 முதல் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே நுழைய முயன்றனர். நான் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் செய்தேன். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து எங்களை பாதுகாத்தார். நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம். செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி சுமார் 6 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். அவரும் மனிதர் தானே சிறைப்பிடித்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தர்மசங்கடமான நிலையில் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

 

 

கலெக்டர் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே திமுக தரப்பிற்கு பிரச்சாரம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கலெக்டர் உடனே இரண்டு கட்சியினருக்கும் இறுதி கட்ட பிரச்சாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். 

 

attack

 

இதற்கு இடையில் திமுக தரப்பில் நீதிமன்ற அனுமதி இருந்தால் வேட்பாளர் ஜோதிமணி தலைமையில் நாஞ்சில்சம்பத், கே.என்.நேரு ஆகியோருடன் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் அந்த பக்கம் வந்த அதிமுகவினர் கற்களை நோக்கி வீச அந்த இடமே கலவர பூமியாக மாறியது. உடனே போலிஸ் 144 தடை உத்தரவு போட்டு அந்த இடத்தில் வெளியூர் ஆட்களை அப்புறப்படுத்தினார்கள். 

 

 

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் முறைபடி ஆன்லைன் மூறையில் விண்ணப்பம் செய்ததை திட்டமிட்ட பிரச்சார அனுமதியில் குளறுபடி செய்தும் அனுமதி மறுத்த நிலையிலும் பிரச்சனையை பெரிதாக்க நினைக்கையில் நீதிமன்ற அனுமதியுடன் பிரச்சாரத்தை தொடர்ந்தால் கலெக்டர் தனக்கு கொலை மிரட்டல் என்று சொல்லி தேர்தலை நிறுத்த திட்டமிட்டிருக்கிறார் என்கிறார் கரூர் மாவட்ட திமுகவினர். 

 

கரூர் மாவட்ட  ஆட்சியர் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது தான்தோன்றி போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர். இன்னும் பதட்டநிலை அப்படியே இருக்கிறது கரூர் எம்.பி. தொகுதி ! 

 

  

சார்ந்த செய்திகள்