கோவை அன்னூர் வடக்கலூர் பகுதியைச் சேர்ந்த குமாருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சந்தியா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற மகள் இருக்கிறாள். அன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் சந்தியா செல்ஃபோனில் அதிக நேரத்தைச் செலவழித்ததால், ‘அந்த செல்ஃபோன்ல என்னதான் இருக்கோ..? ஃபோனை வை.’ என சந்தியாவின் தந்தை அவரை கண்டித்திருக்கிறார்.
இதனால், விரக்தியடைந்த பள்ளி மாணவி நேற்று மாலை சாணி பவுடரை குடித்து விட்டார். வீட்டில், மயங்கிய நிலையில் கிடந்த மாணவியைக் கண்ட அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். இதனைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சந்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்ஃபோன்லயே நேரத்தை விரயம் பண்ணாதே எனச் சொல்லியது குற்றமா? என உறவினர்கள் புலம்பி அழுதார்கள்.