வனம் அமைப்பு சார்பில் 26 குடும்பத்தைச் சேர்ந்த 52 பேர் தங்களது பசுமை பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்று அங்குள்ள விவசாயம் மற்றும் நவீன் உத்திகள் குறித்த உலக அளவிலான விவசாய கண்காட்சியில் பங்கெடுத்து விட்டு நாடு திரும்பியுள்ளனர்.
இந்த அமைப்பு சார்பில் கடந்த 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இஸ்ரேலில் நடந்த விவசாய கண்காட்சியில் குறைவான தண்ணீரில் அதிக மகசூல் பெறுவது குறித்தும், இயற்கை விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் நுணுக்கங்களை தெரிந்து கொண்டதாகவும், அங்கு இயற்கை விவசாயம் 95% நடைபெறுவதாக தெரிவித்தனர். மேலும் இஸ்ரேலைவிட இந்தியா 10 முதல் 15 வருடங்கள் வரை விவசாயத்தில் பின்னோக்கியுள்ள தெரிவித்தார். அங்கு கற்ற உத்திகளை பல்லடம் மற்றும் கோவை பகுதியில் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
வனம் அமைப்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மரம் நடுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. மேலும் இந்த அமைப்பு சார்பில் கோவை திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்றரை லட்சம் மரங்கள் நடப்பட்டதாக தெரிவித்தனர்.