Skip to main content

பெண் காவலருக்கு கரோனா தொற்று!

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சி கோணம்பாளையத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பெண் காவலர். இவர் கோவை மாநகர போலீஸ் நிலையத்திற்குட்பட்ட காவல் நிலையம் ஒன்றில் குற்றப்பிரிவில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். 
 

coimbatore



கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிள்ளையார்புரம் சோதனைச்சாவடியில் பணி முடிந்தததையொட்டி இவருக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது. அப்போது அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்ந்தார்.
 

அவரது ரத்தம், சளி மாதிரி ஆகியவற்றை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்குக் கரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

 

  

சார்ந்த செய்திகள்