சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். மலேசியாவிலேயே தைப் பூசத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தை ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியுள்ளோம்.
விஜய்யை விட அதிகமாக சம்பளம் வாங்குபவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு படத்திற்கு ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூபாய் 126 கோடி சம்பளம் வாங்குகிறார் அந்த நபர். ரூபாய் 66 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்பதையும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்று ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார். தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு நடப்பதை மறைக்கவே திடீரென ரஜினி வெளியே வந்து பேட்டிக்கொடுக்கிறார். சிஏஏ இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல; இவங்க சொல்லுறப்படி பார்த்தால் மனித குலத்திற்கே எதிரானது. மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. அன்புச்செழியன் சினிமாவிற்கு பைனான்ஸ் தருவதில்லை; நான் படம் எடுக்க பணம் கேட்டபோது எனக்கு தரவில்லை." இவ்வாறு சீமான் பேசினார்.