Skip to main content

தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

cm mk stalin congrats taml writers

 

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய புரஸ்கார் மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் விருதுகள் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் இலக்கியத்துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

 

இதில் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ’ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்கு பால சாகித்ய புராஸ்கார் விருது கிடைத்துள்ளது. மேலும் எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய ’திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு எழுத்தாளர்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், “நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ’ஆதனின்பொம்மை’-யை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புராஸ்கர் விருது பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும்; இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவ சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள ராம் தங்கம் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்