Skip to main content

மூடப்பட்ட மெரினா... சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்! (படங்கள்) 

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று (30/12/2021) மதியம் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று (30/12/2021) மாலை அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப இருசக்கர, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.

 

இந்த நிலையில் சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் மெரினா கடற்கரை, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலை, தி.நகர் விஜயராகவா சாலை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே போல் மெரினா கடற்கரையில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. 

 

 

 

சார்ந்த செய்திகள்