திருப்பத்தூர் மாவட்டம், ஆம்புர் நகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான சம்பளம், கரோனா கால போனஸ், கரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதுக்குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டும், வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் சம்பளம், போனஸ், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் குப்பை அள்ளச் சொல்லுவதை குறிப்பிட்டு ஐந்து அம்ச கோரிக்கைகளுடன் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதியென இரண்டு நாட்களாக குடும்பத்தினருடன் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து போராடி வருகின்றனர்.
போராட்டம் செய்யும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் ஆம்பூர் நகரம் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளன. பொங்கல் திருநாளில் நகரம் சுத்தமாகயில்லாமல் அசுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் காரணமாகிவிட்டார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.