Published on 01/11/2020 | Edited on 01/11/2020

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை வெளியிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 16ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், அதேபோல் கல்லூரிகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பி.இ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர் 23 முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை செமஸ்டர் வகுப்புகள் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.