Skip to main content

அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

CITU demands various things


அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புச் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகாவில் இன்று (23.09.2020) நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.


இதில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், "அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கரோனா கால கடத்தில் ஊதியம் கொடுக்க வேண்டும். பணிநீக்கம், ஊதியக் குறைப்பு போன்ற செயல்களில் தொழில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது. கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு எடுக்க வேண்டும். ஊதியக் குறைப்பு பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும். கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தவர்கள் அலைபேசி எண்ணை ஆதார் அட்டையில் பதிவு செய்ய வேண்டும் ஆனால் கட்டாயப் படுத்தக் கூடாது" என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

 

 

 

சார்ந்த செய்திகள்