Skip to main content

சினிமா கவர்ச்சியை நம்பாமல் மக்களுக்கு சேவை செய்த பின் விஷால் போட்டியிடலாம்: தமீமுன் அன்சாரி

Published on 04/12/2017 | Edited on 04/12/2017
சினிமா கவர்ச்சியை நம்பாமல் மக்களுக்கு சேவை செய்த பின் விஷால் போட்டியிடலாம்: தமீமுன் அன்சாரி



சினிமா கவர்ச்சியை நம்பாமல் பொதுமக்களுக்கு சேவை செய்த பின் விஷால் போட்டியிடலாம் என மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

விஷால் தீடிரென ஆர்கே நகர் தேர்தலில் நிற்பதாக அறிவித்திருப்பது யாராலும் ஏற்று கொள்ள முடியாது. வெறும் சினிமா கவர்ச்சியை மட்டும் நம்பாமல் சிறிது காலம் பொதுமக்களுக்கு பொது சேவை செய்து விஷால் போட்டியிட வேண்டும்.

கன்னியாகுமரியல் புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இறந்த குடும்பத்திற்கு ரூ.10லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். மீட்பு பணிகளை தூரிதபடுத்த வேண்டும். மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியுதவியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிம் முன் அன்சாரி
கூறினார்.
    
- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்