Skip to main content

நள்ளிரவில் தேவாலயங்களை திறப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை: எச்.ராஜா

Published on 30/12/2017 | Edited on 30/12/2017

நள்ளிரவில் தேவாலயங்களை திறப்பதில் 
எந்தவித ஆட்சேபனையும் இல்லை: எச்.ராஜா

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் அந்தமான் தீவுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ண கொடியை ஏற்றிய தினத்தையொட்டி விழுப்புரத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இதனை தொடங்கி வைத்தார்.   

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராஜா, புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோயில்களை திறக்கக்கூடாது.  நள்ளிரவில் கோயில்களை திறப்பதை இந்து சமய அறநிலையத்துறை தடுக்க வேண்டும்.  ஆகம விதிப்படி அர்த்த ஜாமத்திற்கு பிறகு கோவில்களில் நடை திறந்திருப்பது தவறு.  அந்த குற்றத்தை அரசாங்கம் சரி செய்யும் என்று நினைக்கிறேன்.  அவர் மேலும், புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் தேவாலயங்களை திறப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை’’ என்று கூறினார்.  

சார்ந்த செய்திகள்