
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான வழக்கில், போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சித்ராவை தற்கொலைக்குத் தூண்டிய புகாரில், அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சித்ரா தற்கொலை சம்பவம் தொடர்பாக, சித்ராவின் குடும்பத்தார் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 6 நாட்களாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத்தான் காரணமென சித்ராவின் தாயார் விஜயா குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை, பூந்தமல்லி நீதிபதியிடம் ஆஜர் செய்து, ரிமாண்ட் செய்வதற்கான நடைமுறைகளைப் போலீசார் செய்து வருகின்றனர்.