
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சார்பில் 36 மாவட்டங்களில் 70 மருந்தகங்களை முதலமைச்சர் இன்று (16.12.2021) காணொளி வாயிலாக திறந்துவைத்தார். அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் சிந்தாமணி கூட்டுறவு மருந்தகங்கள் இரண்டு இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இவை திருச்சி மாநகரத்தில் பாலக்கரை பகுதியிலும், மற்றொரு மருந்தகமானது டால்மியாபுரம் தொகுதியிலும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்தகங்களில் அடிப்படை நோய்களுக்கான அனைத்து மாத்திரைகளும் மருந்துகளும் கிடைக்கும். குறிப்பாக நீரிழிவு நோய்கள், ரத்த கொதிப்பு, காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் இதய நோய் தொடர்பான அனைத்து நோய்களுக்குமான மருந்துகளும், உணவு சார்ந்த பொருட்களும், குறிப்பாக எனர்ஜி டிரிங்க் உள்ளிட்டவையும் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. இந்த மருந்தகங்களில் வாங்கக் கூடிய அனைத்து மருந்துகளுக்கும் அதன் விலையில் இருந்து அரசு 20 சதவீத தள்ளுபடி வழங்குகிறது.