Skip to main content

மக்களை நேரடியாக சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர்! (படங்கள்)

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த  நான்கு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார்கள்.

 

அதேபோல் முதல்வர், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவருகிறார். அந்த வகையில், வடசென்னை பெரம்பூர் சுப்பிரமணிய தோட்டம், 68வது வட்டச் செயலாளர் பொன்முடி ஏற்பாட்டில் சுமார் 500 பேருக்கு 1 லிட்டர் பால், ரொட்டி, பிஸ்கட், போர்வை, பாய், 5 கிலோ அரிசி ஆகியவற்றை அப்பகுதி வாழ் மக்களுக்கு முதல்வர் வழங்கினார்.  

 

 

சார்ந்த செய்திகள்