சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு
ரூ.7 லட்சத்தில் வைரமாலை நன்கொடை!
சிதம்பரம் நடராஜர் கோவில் நடராஜ பெருமானுக்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் செலவில் செய்யப்பட்ட கனகபுஷ்பராக வைர மாலையை சென்னையை சேர்ந்த நர்தன நாதன் என்பவரும் அவரது குடும்பத்தினர் நன்கொடையாக அளித்துள்ளனர்.
இந்த கனக புஷ்பராக வைர மாலை புதன்கிழமை இரவு நடராஜ பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது. அதே போல் சிவகாமசுந்தரி அம்மனுக்கு பவுனில் செய்யப்பட்ட வில்வ இலையும் சாத்தப்பட்டது. இதை நர்தனநாத அய்யரின் கட்டளை தீட்சதர் வேம்பு தீட்சதர் குடும்பத்தினர் நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் முன்னிலையில் சாற்றி நடராஜ பெருமானுக்கும் சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
- அ.காளிதாஸ்