Skip to main content

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குத் தேசிய தரச்சான்று வழங்குவது குறித்து மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Chidambaram Government Hospital to receive National Certification

 

சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு தேசிய சுகாதார திட்ட தரச்சான்று தருவது தொடர்பாக டெல்லியில் இருந்து மத்திய அரசு மருத்துவ குழுவினர் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ந்தேதி வரை மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் மருத்துவர்கள் ஸ்ரீநாத் ரெட்டி, ஸ்ரீதர் ராவ், சரிதா சக்சேனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இவர்கள் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அசோக் பாஸ்கரிடம் மருத்துவமனையின் சுகாதாரம், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் இந்த குழுவினர் மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு செய்து, டெல்லியில் ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பார்கள் பின்னர் தேசிய தரச்சான்றிதழ் மத்திய அரசு மருத்துவ குழுவினர் வழங்குவார்கள். இதன் பிறகு மத்திய அரசு வழங்கும் உதவிகள் அனைத்தும் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.  இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் மருத்துவர்கள் சரவணகுமார், கிரிதரன், பரிமேலழகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

 

தற்போது சிதம்பரம் அரசு மருத்துவமனை கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள மயிலாடுதுறை, அரியலூர் சிதம்பரம் உட்கோட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் உதவிகள் நேரிடையாக கிடைத்தால் இந்த மருத்துவமனையை நம்பி வரும் அனைத்து ஏழை நோயாளிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்